Tuesday, March 15, 2011

கடிகார முட்கள்

மணிக்கொரு முறை 
ஊடலும் கூடலும் 
                  - கடிகார முட்கள் 

தொலைபேசி மணியொலி

உனக்காக அழுகிறேன் 
அணைக்க மாட்டாயா !
                    - தொலைபேசி மணியொலி 

குடி

குடிக்கக்  குடிக்கக் காலியானது 
பாட்டில் மட்டுமல்ல 
                   - வாழ்நாளும் தான்  

சிகரெட்

தனக்கு தானே 
கொல்லி வைக்கிறான் 
                     - சிகரெட் 

அப்படியென்ன காதல்

அப்படியென்ன காதல் 
சூரியன் முன் 
வெட்கி நானுகிறாள் 
              - வெள்ளி பனி 

மழைத்துளியும் பெண்தான்

சந்தேகமில்லை 
மழைத்துளியும் பெண்தான் 
மேகத்தை பிரிந்து 
மண்ணை மனக்கிறாளே !

என் மகள்

என்னை சுமந்த தாயை 
நானும் சுமக்கிறேன் 
                - என் மகள் வடிவில் 

நினைவுகள்

நிஜத்தில் நிழல் 
ஆனால்
நிஜத்தின் நிழல் 
               - நினைவுகள் 

தூக்கில் தொங்கி விடு

எனக்கு பதில் 
தூக்கில் 
நீ தொங்கி விடு
                    -  விடைத்தாள்களை நூலில் கட்டினேன்
    

வானவில்

வானளவு சென்றாலும் 
வளைந்து கொடுப்பேன் 
                       - வானவில் 

மழைத்துளி

மேகத்தாய் குளிப்பாட்ட 
பூமகள் குளிக்கிறாள் 
                  - மழைத்துளி 

Monday, March 14, 2011

- டாஸ்மார்க்

நியாய விலை கடை 
ஒருமுறை  உயிர்விட  ரூ . 76 
                              - டாஸ்மார்க் 
 

வெட்கத்தில் சிவந்தாளோ !

இன்னும்
நனைய  நனைய 
வெட்கத்தில் சிவந்தாளோ !
                               மழையில்  செம்மண்

அம்மா

என்னில் 
ஆயிரம் முறை  ஒலிக்கும்  ஆலயமணி 
                                                         அம்மா 
நான்  தொழும்  ஆலயமும்  நீ 
                                                         அம்மா

Saturday, March 12, 2011

அன்னை தெரசா

அன்னை தெரசா 
சேவையே  சேலைகட்டி  நடந்தது

இரவில் நடமாடதே

இரவில்  நடமாடதே  
நிலவே !
பொல்லாத  உலகம்  உன்னையும் 
தகாதவள்  எனலாம்

ஓய்வு

ஓய்வு
          - வார்க்கபடாத  வெள்ளிக்கட்டி

ஆசிரியர்

என்  தாய் தான்  எனக்கு  தெய்வம் 
அவளும் உன்னை  வணங்கும் போதுதான்  தெரிகிறது 
நீ - தெய்வத்திற்கு  மேல் என்று 

காதல் சளிக்கவில்லை !

எத்தனை நபரை காதலித்தும் 
காதல் சளிக்கவில்லை !
என்னை  கருவில் சுமந்த 
               தாய் முதல் 
என் கருவான 
              மகள் வரை ...

என்னையும் மன்னித்தாள்

என்னையும்  மன்னித்தாள்
           என்னிடம்  பெற்ற  ஐம்பது பைசாவை 
           என்  முகத்தில்  விசிறிய 
                                 பிச்சைக்காரி

நிம்மதி

நிம்மதி 
- பணிஅலுப்பைக்   கண்டு  தலைகோதும் 
                                  தாயின் விரலில் ...

தடைகள்

தடைகள் 
      - வெற்றி  பாதையின்  திசைக்காட்டி  பலகைகள்

வள்ளுவன் சாயலில் ...

அன்பினால்  அகதியும்  சொந்தமாவர்  அக்திலார்
உடையினும்  அகதி ஆவர்

வள்ளுவன் நினைவாக ...

உளிதன்னை  தாங்கும்  சிலைபோல  மாந்தரும் 
வலிதன்னை  நீர்த்தல்  நலம்

தலையணை

என் உப்பு கண்ணீரையும் 
என்னில் உதிர்ந்த முத்தத்தையும் 
முழுதாய் பதித்த தோழி 
                        - தலையணை

முதியோர் இல்லம்

பூஜிக்க தவறிய தெய்வங்களின் கோயில் 
                                         - முதியோர் இல்லம்


Wednesday, March 9, 2011

மழைத் துளி

மழைத் துளி 
        மேகத்தாய் பூமிக்கு பாலூட்டுகிறாள்

சத்தமில்லா சுகபிரசவம்

சத்தமில்லா சுகபிரசவம் 
              - புத்தகத்தினுள்     குட்டி ஈனும் மயிலிறகு