குட்டி மகள்
அவள் சுட்டியிலும் குட்டி !
அவள் சுட்டு விரலும் குட்டி !!
அவள் இம்சையும் குட்டி ! - என் முன்
அவள் இமைக்கும் பொழுதும் குட்டி !!
அவளினும் சித்திரமும் குட்டி !
இல்லையென்றால் என் சிந்தனை குட்டி !!
அப்பா வார்த்தை குட்டி !
அழைக்கும் ஒரே உயிர் குட்டி !!
சிரிக்கும் இதழும் குட்டி !
சினுங்கும் பொழுதும் குட்டி !!
எம்மில் மனதின் இடைவெளி குட்டி !
அதனினும் பொங்கும் கடலும் குட்டி !!
நாளொன்றில் பேசும் நிமிடங்கள் குட்டி !
பேசாவிட்டால் அந்நாளே குட்டி !!
உலகமட்டில் அவள் உருவம் குட்டி ! - ஆனால்
என் உலகமே குட்டி !!