குட்டி கவிதைகள்
Thursday, April 4, 2013
பிறந்தநாள் பரிசாக ...
தாம்பளத்தில் நின்று கொண்டு
தன்னையே ஏந்துகிறேன்
- அம்மா உன் பிறந்தநாள் பரிசாக ...
என் அம்மாவின் பிறந்தநாள்
இன்று
என் ஆதிபுள்ளி
புவியில் அடி வைத்த நாள் !
- என் அம்மாவின் பிறந்தநாள்
Monday, April 1, 2013
மூச்சு திணறல்
மூச்சு திணறி செத்தே போனது
- பொம்மையை வாங்கிய மகளின் சிரிப்பில் நனைந்த
என் வறுமை
வெயில்
அனுதினமும் சூரியனை தொழுபவள்
என் தாய்
அவளும் கூட சூரியனை வசைக்கிறாள்
- நான் வெயிலில் விளையாடும் போது ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)