Monday, May 6, 2013

குட்டி


குட்டி மகள் 


அவள் சுட்டியிலும் குட்டி !
             அவள் சுட்டு விரலும் குட்டி !!

அவள் இம்சையும் குட்டி !   - என் முன்
               அவள் இமைக்கும் பொழுதும் குட்டி !!

அவளினும் சித்திரமும் குட்டி !
              இல்லையென்றால் என் சிந்தனை குட்டி !!

அப்பா வார்த்தை குட்டி !
              அழைக்கும் ஒரே உயிர் குட்டி !!

சிரிக்கும் இதழும் குட்டி ! 
              சினுங்கும் பொழுதும் குட்டி !!

எம்மில் மனதின் இடைவெளி குட்டி ! 
              அதனினும் பொங்கும் கடலும் குட்டி !!

நாளொன்றில் பேசும் நிமிடங்கள் குட்டி ! 
             பேசாவிட்டால் அந்நாளே குட்டி !!

உலகமட்டில் அவள் உருவம் குட்டி !   - ஆனால் 
             என் உலகமே குட்டி !!
              
                      
         

2 comments:

  1. மிக அருமையாக எழுதுகிறீர்கள்.....பாராட்டுக்கள். மீண்டும் எழுத தொடங்குங்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)

    ReplyDelete

மறந்துட்டியா ! ! !